இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவராக திலங்க சுமதிபால!!

472

thilanga1

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக திலங்க சுமதிபால தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று காலை இடம்பெற்ற கிரிக்கெட் நிறுவனத்துக்கான தேர்தலில் அவர் 88 வாக்குகளைப் பெற்றார்.

மேலும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நிஷங்க ரணதுங்க 56 வாக்குகளை எடுத்துள்ளார். இதன்படி 32 வாக்குகள் வித்தியாசத்தில் திலங்க சுமதிபால வெற்றியீட்டியுள்ளார். திலங்க சுமதிபால இலங்கைப் பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் என்பது குறிப்பிடத்தக்கது.