நவாஷ் ஷெரீப்பை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வுகள் இன்று!!

395

480758037Untitled-1

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப்பை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வுகள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இதேவேளை பாகிஸ்தான் பிரதமரின் வருகையை முன்னிட்டு கொழும்பில் விஷேட போக்குவரத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன்படி இன்று காலை 08.30 முதல் காலை 10.00 மணி வரையான காலப்பகுதியில் பாடசாலை வீதி தொடக்கம் ரீகல் சுற்றுவட்டம் வரையும் வங்கி மாவத்தை, ஜனாதிபதி மாவத்தை, காலி மத்திய பாதை வரையிலும் மூடப்படவுள்ளன.

மேலும் காலை 11.00 மணி தொடக்கம் 12.30 வரையான காலப்பகுதியில் என்.எஸ்.ஏ சுற்றுவட்டம் முதல் காலி வீதி கொள்ளுப்பிடிய சந்தி வரையான பாதை மூடப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் கொள்ளுப்பிடிய சந்தி முதல் காலி வீதி, என்.எஸ்.ஏ சுற்றுவட்டம், லோடஸ் வீதி, ரீகல் சுற்றுவட்டம், பாடசாலை வீதி முதல் கொள்ளுப்பிட்டி பொலிஸூக்கு முன்னாலுள்ள சுற்றுவட்டம் வரையான பாதை பிற்பகல் 01.30 தொடக்கம் 02.00 மணிவரை மூடப்படவுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.