வில்பத்து காடழிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் மீது தவறாக குற்றச்சாட்டு!!

268

ma

வில்பத்து காடழிப்பு தொடர்பில் சிலர் தற்போதைய அரசாங்கத்தின் மீது தவறாக குற்றச்சாட்டுக்களை சுமத்துவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மீள்குடியேற்றத்திற்காக பிற பகுதிகளில் இடங்களை வழங்கக் கூடியதாக இருக்கின்ற போதும், கடந்த ஆட்சிக் காலத்தில் பாரிய காடழிப்பு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். 2020ம் ஆண்டளவில் புகையிலைச் செய்கை முற்று முழுதாக நாட்டில் தடைசெய்யப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.