
கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, இலங்கையின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒரு வருடங்கள் பூர்த்தியடையவுள்ளது.இது தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வைபவம் எதிர்வரும் 8ம் திகதி பிற்பகல் 02.00 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதே மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இதன்போது, மகாத்மா காந்தியின் பேரன் கோபால் கிருஸ்ணா காந்தி விஷேட உரையாற்றவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.கோபால் கிருஸ்ணா காந்தி இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





