பாகிஸ்தான் – இலங்கைக்கு இடையில் 8 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!!

929

Pakistan-Vs-Sri-Lanka-odi

இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் எட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளன. இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் நேற்று மாலை இலங்கையை வந்தடைந்தார்.

அவரை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்படி இரு நாடுகளுக்கு இடையிலும் கலாசார மேம்பாடு, பாதுகாப்பு ஒத்துழைப்பு உட்பட 8 உடன்படிக்கைகள் இன்றையதினம் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.