பரபரப்பான போட்டியில் இலங்கை அணி 3 ஓட்டங்களால் தோல்வி!!

435

NZ

இலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நியூசிலாந்து பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி 3 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி களம் இறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

நியூசிலாந்து அணி சார்பாக அதிகூடிய ஓட்டங்களாக மாட்டின் குப்டில் 58 ஓட்டங்களையும் கனே வில்லியம்சன் 53 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் நுவான் குலசேகர 2 விக்கெட்டுக்களையும் வண்டர்சி 1 விக்கெட்டினையும் பெற்றனர்.

வெற்றிபெற இலங்கை அணிக்கு 183 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் களம் இறங்கிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இலங்கை அணி சார்பாக அதிகூடிய ஓட்டங்களாக Danushka தனுஷ்க குணதிலக 46 ஓட்டங்களையும் மிலிந்த சிறிவர்தன 42 ஓட்டங்களையும் பெற்றனர்.

நியூசிலாந்து அணி சார்பாக பந்து வீச்சில் மற் ஹென்றி மற்றும் போல்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை பெற்றனர்.