இன்று இலங்கை வருகிறார் போர்ஜ் பிரென்டே!!

452

Borge-Brende---

நோர்வே வௌிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரென்டே (Borge Brende) ஒருநாள் விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார். அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பின் பேரில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்வதாக, வௌிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி போர்ஜ் பிரென்டே, இன்று காலை வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பிலும் கலந்து கொள்ளவுள்ளார்.இலங்கை மற்றும் நோர்வேக்கு இடையிலான பொருளாதார மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்புக்களை அதிகரிப்பதே, அவரது இந்த விஜயத்தின் நோக்கம் எனத் தெரியவந்துள்ளது.

மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் அவர் சந்திக்கவுள்ளதோடு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதூங்கவுடனும் கலந்துரையாடவுள்ளார்.இதேவேளை இன்று பிற்பகல் இடம்பெறவுள்ள வர்த்தக மாநாடு ஒன்றிலும் நோர்வே வௌிவிவகார அமைச்சர் கலந்து கொள்ளவுள்ளார்