அரச பணியாளர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும் வயதை, 65ஆக அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகிறது. அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
60 வயதின் முன்னர் சிறந்த மனநிலை முதிர்ச்சி ஏற்படுகிறது.இது சிறந்த சேவையை பெற்றுக் கொள்ளக்கூடிய வயது.ஆனால் இந்த வயதில் அரச பணியாளர்கள் ஓய்வு பெறுவது அவர்களுக்கும் நட்டம், நாட்டுக்கும் நட்டம்.எனவே இதனை 65 வயதாக அதிகரிப்பது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.