முடி வெட்டச் சொன்ன ஆசிரியரை விக்கெட் பொல்லால் சரமாரியாக தாக்கிய மாணவன்!!

526

stumps-1419005572

காலி பிரதேச பாடசாலை ஒன்றின் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர், ஆசிரியரை விக்கெட் பொல்லுகளால் தாக்கியுள்ளார்.  இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஆசிரியர் கராபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப் பாடசாலையின் ஒழுக்காற்று ஆசிரியரான அவர், குறித்த மாணவனிடம் முடி வெட்டும் படி தெரிவித்து விட்டு, வேறு பணிகளைச் செய்து கொண்டிருந்த வேளையே மாணவர் அவரைத் தாக்கியுள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பிலான விசாரணைகளை அக்மீமன பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை பஸ்ஸில் முன்னால் வாயிலால் விழுந்து பின் சக்கரத்தில் சிக்கி காயமடைந்த மாணவர் ஒருவர் கராபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படபொல – கஹடபிடிய பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் எட்டாம் தரத்தில் கற்கும் 13 வயதான மாணவரே இவ்வாறு காயமடைந்துள்ளதோடு, இதனுடன் தொடர்புடைய பஸ் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.