
குவைத்தில் இந்தியப் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு, விபச்சாரத்திலும் அவரை ஈடுபடுத்த முயற்சித்ததாக, இலங்கையர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் அந்த நாட்டு பொலிஸ் நிலையம் ஒன்றில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் குறித்த பெண்ணுக்கு நிறுவனம் ஒன்றில் வேலை பெற்றுத் தருவதாகவும் தனது குடியிறுப்புக்கு வந்து விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து தருமாறும் கோரியுள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும் பின்னர் அவர் அந்தப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதோடு, விபச்சாரத்திலும் ஈடுபட வற்புறுத்தியுள்ளதாக, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
எனினும் அந்தப் பெண் அவரது கோரிக்கைக்கு இணங்க மறுத்ததால் அவரை சந்தேகநபர் தாக்கியுள்ளதாகவும், இதனால் காயமடைந்த அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றமைக்கான ஆதாரங்களையும் பொலிஸில் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரைக் கைதுசெய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.





