14 வயது சிறுமி துஷ்பிரயோகம் – சிலாபத்தில் இளைஞர் கைது!!

589

1 (10)

14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 22 வயது இளைஞர் ஒருவர் சிலாபம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். முகுணுவடவன – புலியந்கடவர பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரே சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சந்தேகநபரும் அதே பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

பாடசாலைக்குச் சென்ற தமது மகள் கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக, பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்தனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி, குறித்த சிறுமி மீட்கப்பட்டதோடு, இளைஞர் ஒருவரோடு காதல் தொடர்பைப் பேணியதாகவும், அவர் அழைத்ததன் பேரிலேயே பெற்றோரை விட்டு சென்றதாகவும் பொலிஸில் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து சிறுமி வைத்தியப் பரிசோதனைகளுக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் வைத்தியர்கள் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதை உறுதி செய்தமையால், சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரை சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.