
காலியில் இருந்து எல்பிட்டியவுக்கு பயணம் மேற்கொண்ட தனியார் பேரூந்தில் இருந்து கீழே விழுந்த மாணவி, பாரிய காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது பாதங்களுக்கே அதிக காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இன்று காலை 7.00 மணியளவில் குறித்த மாணவி பேரூந்தில் ஏறமுற்பட்ட போது, அதிக சனநெரிசல் காரணமாக பேரூந்து மிதி பலகையில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். பின்னர் அவரது கால்களின் மீது பஸ்ஸின் பின்புற சக்கரம் ஏறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் குறித்த மாணவியை பிரதேச மக்கள் கராபிட்டிய மருத்துமனையில் அனுமதித்துள்ளனர். பட்டபொல , கஹடபிடிய பிரதேசத்தைச் சேர்ந்த தரம் 8 இல் கற்கும் மாணவியே இவ்வாறு காயமடைந்துள்ளார்.





