யாழில் உறவினரிடம் இருந்து தப்பிக்க கிணற்றில் குதித்த காதல் ஜோடி – காதலன் பலி!!

432

Dead

யாழ். – கோப்பாய் – இராசபாத வீதியிலுள்ள தோட்டப் பகுதியிலுள்ள கிணறு ஒன்றினுள் குதித்த காதலர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய காதலன் பலியாகியுள்ளதோடு, அவரது 21 வயதான காதலி உயிர்தப்பியுள்ளார்.

திங்கட்கிழமை (11) மாலை வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள், உறவினர்களால் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்த இந்த ஜோடி கிணற்றுக்குள் குதித்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.