ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை: டெல்லியில் பரபரப்பு!!

537

delhi_murder_002

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 மூன்று பேரை கொலை செய்துவிட்டு உடலை பீரோவில் மறைத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் பழைய ராஜேந்திர நகரை சேர்ந்தவர் சஞ்சய் (50).தனது மனைவி ஜோதிசவாரியா (48). மகன் பவன் (21) ஆகியோருடன் அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது மாடியில் வசித்து வந்தார்.

இவர் டெல்லி அரசின் உணவு மற்றும் சிவில் சப்ளை துறையில் குமாஸ்தாவாக பணிபுரிந்துள்ளார்.பல்வேறு முறைகேடு புகார்கள் காரணமாக சஸ்பெண்டு செய்யப் பட்டதையடுத்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.இந்நிலையில் கடந்த ஞாயிறன்று நீண்ட நேரமாகியும் இவர்களது வீடு திறக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.இதனால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டினர் போலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தபோது வீட்டில் பொருட்கள் சிதறி அலங்கோலமாக கிடந்தன.உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் ஜோதியும், அவரது மகன் பவனும் கொலை செய்யப் பட்டு பிணமாக கிடந்தனர்.சஞ்சய் வீட்டில் இல்லாததால் அவர்தான் இந்த கொலைகளை செய்திருக்க வேண்டும் என்று பொலிசார் சந்தேகப்பட்டனர்.இந்நிலையில் உள் அறையில் இருந்த அலுமாரியை திறந்து பார்த்தபோது அதில் சஞ்சய்யின் உடல் இருந்தது.

இதனால் பொலிசார் அதிர்ச்சியடைந்தனர். கொலை நடந்த நாளுக்கு முந்தைய நாள் சஞ்சய்க்கும், சிலருக்கும் நீண்ட நேரம் கடும் வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது.எனவே ரியல் எஸ்டேட் தொழிலில் சஞ்சய்க்கு கடன் கொடுத்தவர்கள் இந்த கொலைகளை செய்திருக்கலாம் என்று பொலிசார் கருதுகின்றனர்.இந்த கொலை சம்ப்வம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.