பணம் கொடுக்க மறுத்த வாலிபரை சரமாரியாக குத்திய கொள்ளையன்: சுவிஸில் பயங்கரம்!!

513

bloody_knife

சுவிட்சர்லாந்து நாட்டில் பணம் கொடுக்க மறுத்த வாலிபர் ஒருவரை வழிப்பறி கொள்ளையன் கத்தியால் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சுவிஸில் உள்ள பேசல் நகரில் நேற்று மாலை நேரத்தில் வாலிபர் ஒருவர் நண்பர்களுடன் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது அவர்களை மர்ம நபர் ஒருவர் நீண்ட நேரமாக பின் தொடர்ந்து வந்துள்ளார்.இந்நிலையில், சில நிமிடங்களுக்கு ஒதுக்கு புறமான பகுதி வந்ததை தொடர்ந்து திடீரென அவர்களை கொள்ளையன் வழிமறித்துள்ளான்.‘உங்கள் அனைவரிடமும் உள்ள பணத்தை உடனடியாக என்னிடம் ஒப்படையுங்கள். இல்லையேல் மரணத்தை சந்திக்க நேரிடும்’ என கத்தியை காட்டி மிரட்டியுள்ளான்.

சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் செய்வதறியாது அதிர்ச்சியில் நின்றுள்ளனர்.மேலும், தங்களிடம் பணம் இல்லை என மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையன் நண்பர்களில் ஒருவரை கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விடுகிறான்.ரத்த வெள்ளத்தில் சாய்ந்த வாலிபரை அவர்களது நண்பர்கள் தூக்கி சென்று அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.

வாலிபருக்கு சிகிச்சை நடந்து வரும் நிலையில், சம்பவம் குறித்து நண்பர்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.மருத்துவமனைக்கு வந்த பொலிசார் நண்பர்களிடம் விசாரணை செய்ததில் தாக்குதல் நடத்திய நபருக்கு 30 வயதாக இருக்கலாம் என்ற ஒரு தகவல் மட்டுமே கிடைத்துள்ளது.வழிப்பறி சம்பவத்தில் வாலிபர் ஒருவர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.