பிபா’ சிறந்த வீரருக்கான விருதை 5வது முறையாக தட்டிச்சென்றார் மெஸ்சி!!

421

fifa_award_001

உலகின் சிறந்த கால்பந்து வீரர்களுக்கான விருதை அர்ஜென்டினா அணியின் தலைவர் மெஸ்சி 5வது முறையாக தட்டிச் சென்றுள்ளார்.சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கால்பந்து வீரர்களுக்கான விருது வழங்கப்படுகிறது. இந்த விருது வழங்கல் விழா சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் நடந்தது.

இதில் கடந்த ஆண்டுக்கான பரிந்துரைப் பட்டியலில் மெஸ்சி (அர்ஜென்டினா), நெய்மர் (பிரேசில்), கிறிஸ்டியானோ ரெனால்டோ (போர்த்துக்கல்) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் அர்ஜென்டினாவின் மெஸ்சி பிபா விருதை தட்டிச் சென்றார்.

கால்பந்து பயிற்சியாளர்கள், அணித்தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் அளித்த ஓட்டு எண்ணிக்கையின் அடிப்படையில் அவர் தெரிவு செய்யப்பட்டார். அவர் 41.33 சதவீத ஓட்டுகள் பெற்றிருந்தார். கடந்த முறை விருது வென்ற ரொனால்டோ (27.76 சதவீதம்) 2வது இடத்தையும், நெய்மர் (7.86 சதவீதம்) 3வது இடத்தையும் பிடித்தனர்.

அதே போல் சிறந்த வீராங்கனைக்கான பட்டியலில் 35.28 சதவீத ஓட்டுகள் பெற்ற அமெரிக்காவின் கார்லி லாயிடு ’பிபா’ சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்றார்.