
சினிமாவில் 10 வருடமாக நாயகியாக நடித்து வருபவர் த்ரிஷா. இவருக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகின்றனர்.இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான அஸ்வின், த்ரிஷாவின் தீவிர ரசிகராம்.இதனை ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
மேலும் அவர், நான் 8வது படிக்கும் போது லேசா லேசா படம் வந்தது. நான் மற்றும் எனது நண்பர்கள் ஐந்து பேரும் த்ரிஷா ரசிகர்கள் தான்.அப்போது ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பித்தோம், ஆனால் அதை ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்பதெல்லாம் தெரியாது.அவரின் புகைப்படங்களை ஒன்றுவிடாமல் சேகரிக்கும் அளவிற்கு தீவிர ரசிகராக இருந்தோம் என்றார்.





