
சென்னை பல்கலைக்கழக கட்டிடத்தின் மீது ஏறி தீக்குளிக்கப் போவதாக மாணவர் ஒருவர் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
பின்னர், இதில் 6 பேரை தவிர மாற்றவர்கள் மீண்டும் சேர்த்து கொள்ளப்பட்டுள்ளனர்.இந்நிலையில், சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று பல்கலை வளாகத்தில் நேற்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரையும் மீண்டும் பல்கலையில் சேர்க்க வேண்டும் என்றும் மாணவர் பேரவை அமைக்க பல்கலை நிர்வாகம் அனுமதி தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவரான ராஜ்குமார் என்பவர், இன்று பகல் 12 மணியளவில் பல்கலைக்கழக மாடியில் நின்று தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.அவர் கையில் மண்ணெண்ணெய் கேன் மற்றும் தீப்பெட்டியுடன் தீக்குளிக்கக் போவதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிசார் அந்த மாணவரை கீழே இறங்க வைக்க முயன்றுள்ளனர்.ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின் அந்த மாணவரை மீட்டு கைது செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.





