புகையிரதம் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை!!

473

1 (40)

பண்டாரவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஒருவர் புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற புகையிரதம் முன் பாய்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 55 வயதுடைய ஒருவர் என்பதுடன், குறித்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் பண்டாரவளை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.