இந்தோனேஷியாவில் பதற்ற நிலை; பல பிரதேசங்களில் குண்டு வெடிப்புக்கள் மற்றும் துப்பாக்கிச்சூடு!!

515

1420430498Jakarta

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவின் பல பிரதேசங்களில் வெடிப்புச் சம்பவங்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்ளும் இடம்பெற்றுள்ளன. குறைந்தது மூன்று குண்டுகள் வெடித்துள்ளதாக அந்தநாட்டு செய்திகள் குறிப்பிடுகின்றன.

இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வௌியிடப்பட்டுள்ளது. இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இதில் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒரு பொலிஸாரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் தற்பொழுதும் துப்பாக்கிச்சண்டை இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடக செய்திகள் குறிப்பிடுகின்றன.