சேயா தொடர்பான வழக்கு தொடர்ந்து இடம்பெறும்!!

427

Seya

கொட்டதெனியாவ சிறுமி சேயா சதெவ்மி கொலை தொடர்பான வழக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் நாளாந்தம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என நீர்கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ச்சம்பா ஜானகீ ராஜரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேகத்துக்குரியவரான சமன் ஜயலத் என்பவருக்கு மேல்நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. வழக்கின் சாட்சியாளர்களாக பெயரிடப்பட்டுள்ள 30 பேருக்கும் அறிவித்தல் விடுக்குமாறு நீதிபதி நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சிறுமி சேயா சதெவ்மி கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பில் காவற்துறையினர், சந்தேகத்தின் பேரில் பாடசாலை மாணவன், ஒரு பிள்ளையின் தந்தை, சமன் ஜயலத் என்பவரின் சகோதரரான கொண்டையா ஆகியோரை கைது செய்து பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.