
ஈழத்திலிருந்து தனது படைப்புக்களால் தனி இடத்தைப் பிடித்தவர் இயக்குனர் புவிகரன் இவர் தற்போது வட்டம் எனும் புதிய குறும்படத்தை இயக்கி அக் குறும்படத்திற்கான போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
எப்போதும் நல்ல கதைகளைத் தேர்ந்து எடுத்து இயக்கி வருவதால் புவிகரன் உடைய படைப்புக்களுக்கு ரசிகர்களின் மத்தியில் பாரிய எதிர்பார்பு நிலவிவருகிறது .
அந்த வகையில் இவ் வட்டம் குறும்படத்திற்கான எதிர்பார்பு அதிகரித்துள்ளது. இக்குறும்படம் உண்மைக்கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் ’ஆட்டிஸ்ட்’ சேகர் உடைய கதையிலும் சன்சைன் டி ஷர்சியின் இசையிலும், ஒளிப்பதிவிலும் இக்குறும்படம் தயாராகி வருகின்றது.





