
முதலாம் வகுப்பில் சேர்ந்துக் கொள்ள முடியாத 2000 கும் அதிகமான மாணவர்கள், வீடுகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் செயலாளர், ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.
முதலாம் வகுப்புக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான தேசிய நிகழ்வு இடம்பெற்று நிறைவடைந்துள்ளது.ஆனால் பல மாணவர்கள், இதன் கீழ் பாடசாலைகளில் இணைத்துக் கொள்ளப்படாதுள்ளனர்.அவர்களுக்கு போதிய பாடசாலைகள் இல்லாத நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




