
வல்வெட்டித்துறையினில் தமிழ் பொங்கலை முன்னிட்டு நடத்தப்பட்ட பட்டப்போட்டியினை பார்வையிட பெருமளவினில் மக்கள் திரண்டனர்.யாழ். மாவட்ட செயலகம், வடமராட்சியில் பகுதியிலுள்ள மருதங்கேணி, பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலகம் மற்றும் விளையாட்டுக்கழகங்களின் ஏற்பாட்டில் நேற்று தைத்திருநாள் பொங்கலை முன்னிட்டு சமத்துவத்தின் பொங்கல் என்னும் தொனிப்பொருளிலான பட்டம் ஏற்றும் நிகழ்வு வல்வெட்டித்துறை கடற்கரை பகுதியில் மிகவும் விமர்சையாக இடம்பெற்றது..
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான ஆனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் ப.செந்தில்நந்தனன், மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் புதிதாக கட்டப்பட்ட அணைக்கட்டினை முதலமைச்சர் திறந்து வைத்தார்.முதலமைச்சரினை வரவேற்க பல பகுதிகளிலும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.மேலும் இந்நிகழ்வில் யாழ். மாவட்டத்தினைச் சேர்ந்த 30 சிரேஸ்ட பட்டம் ஏற்றும் கலைஞர்கள், 40 இளம் கலைஞர்கள், மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.





