உலகின் மிகப்பெரிய மற்றொரு நீலநிற மாணிக்கக் கல் இலங்கையில் கண்டெடுப்பு!!

475

The-Star-of-Adam_3541107b

இலங்கையின் தம்புள்ளை, எலஹெர பிரதேசத்தில் மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதன் நிறை 4800 கரட் என்றும் 485 கிராம் எடை கொண்டதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதன் பெறுமதி தொடர்பான சரியான விபரங்கள் இதுவரை வௌியிடப்படவில்லை.

இதற்கு முன்னர் அண்மையில் இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல்லின் பெறுமதி 300 மில்லியன் டொலர்கள் என அதன் உரிமையாளர் அறிவித்திருந்தார். அந்த நீலநிற மாணிக்கக் கல்லின் நிறை 1404.49 கரட் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் அதை விட அதிக நிறையுடைய மற்றொரு நீலநிற மாணிக்கக் கல்லே இவ்வாறு தம்புள்ளை, எலஹெர பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.