காணாமல்போனோரில் பெருமளவானோர் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை- பிரதமர் ரணில்!!

1329

201403050234-15f2c1334295f9fb926871234093ef7a

அர­சியலமைப்பு தொடர்­பான வரைபு இதுவரை உருவாக்கப்படவில்லை. மக்­களின் கருத்­துக்­களின் அடிப்­ப­டை­யி­லி­ருந்தே அர­சியல் அமைப்பு வரைபு தொடர்­பான கட்­ட­மைப்பு உரு­வா­க­வேண்டும். அர­சியலமைப்பு உரு­வாக்­கப்­ப­டும்­போது வெளிப்­ப­டைத்­தன்மை பேணப்­ப­டு­மென பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.காணாமல் ­போனோர் தொடர்­பான எமது பட்­டி­யலில் காணப்­ப­டா­த­வர்­க­ளுக்கு என்ன நடந்­த­தென்று தெரி­யா­துள்­ளது. அவ்­வா­றா­ன­வர்­களில் பெரு­ம­ள­வானோர் உயி­ருடன் இருப்­ப­தற்­கான வாய்ப்­புக்கள் இல்­லை­யென்றே கரு­தப்­ப­ட­வேண்­டி­யுள்­ள­தென்­பதை மிகவும் கவ­லை­யுடன் கூறு­கின்றேன். வடக்­கி­லி­ருந்து  இரா­ணு­வத்­தினர் படிப்­ப­டி­யாக குறைக்­கப்­ப­டு­வார்கள். அத்­துடன் காலா­வ­தி­யான பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்­தையும் விரைவில் நீக்­க­வுள்ளோம் எனவும் பிர­தமர் குறிப்­பிட்டார்.

யாழில் நேற்று நடை­பெற்ற தேசிய தைப் ­பொங்கல் நிகழ்வில் பிர­தம அதி­தி­யா­க­லந்­து­கொண்டு உரை­யாற்­றுகையிலேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

தைப்­பொங்கல் விழா என்­பது யாழ்ப்­பா­ணத்­திற்­கா­னதோ அல்­லது இந்­துக்­க­ளுக்கு மட்­டு­மா­னதோ அல்­லது தமிழ் மக்­க­ளுக்­கான நிகழ்வோ அல்ல. இது முழு நாட்­டுக்கும் பொது­வான தேசிய நிகழ்­வாகும். நாம் எந்த மதத்தைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருந்­தாலும் சூரிய பக­வானை தரி­சிக்­கின்றோம். ஆகவே இது­வொரு பொது­வான நிகழ்­வாகும். இந்த நிகழ்வில் இரண்டு விசேட தன்­மைகள் உள்­ளன. முத­லா­வ­தாக சூரி­ய­னுக்கு நன்றி செலுத்­து­கின்றோம். விவ­சா­யிகள் நெல்லை அறு­வடை செய்து மகிழ்ச்­சி­யா­க­வுள்­ளார்கள். அதனை விட விசே­ட­மாக

விவ­சா­யத்­திற்கு உறு­து­ணை­யா­க­வி­ருந்த எரு­து­க­ளையும் கௌர­விக்­கின்றோம். தெற்கில் என்னை திட்­டு­வார்­களோ தெரி­ய­வில்லை. இருப்­பினும் நான் ஒரு விட­யத்தை இங்கு கூறு­கின்றேன்.அதா­வது பாற்­சோ­றை­வி­டவும் பொங்கல் மிகவும் சுவை­யா­னது. தைப்­பொங்கல் தினத்தில் அறு­வ­டைகள் நிறை­வ­டை­வது ஒரு­பு­ற­மி­ருக்­கையில் புதிய ஆண்டை ஆரம்­பிக்கும் ஒரு நாளா­கவும் காணப்­ப­டு­கின்­றது. எமது வர­லாற்­றினை எடுத்­துக்­கொண்டால் குண்­ட­க­சா­லையில் அறு­வடை செய்­யப்­பட்ட நெல்கொண்­டு­வ­ரப்­பட்டு தலதா மாளி­கையில் வழி­பா­டுகள் செய்யும் வழக்கம் காணப்­பட்­டது.

புதிய வரு­ட­மொன்றை ஆரம்­பிப்­ப­தென்­பது தனியே தமிழர்­க­ளுக்கோ அல்­லத சிங்­க­ள­வர்­க­ளுக்கோ முக்­கி­ய­மா­ன­தொரு விட­ய­மல்ல. தாய்­லாந்து, மியன்மார், கம்­போ­டியா போன்ற பல நாடு­களில் இவ்­வா­றான வைப­வங்கள் நடை­பெ­று­கின்­றன. நானும் எனது பாரி­யாரும் கம்­போ­டி­யா­வுக்குச் சென்­ற­போது புது­வ­ரு­டத்தை முன்­னிட்டு வீதி­களில் செல்­வோ­ருக்கு தண்ணீர் ஊற்­று­வதை அவ­தா­னிக்க முடிந்­தி­ருந்­தது.

கொழும்பில் தேசிய தைப்­பொங்கல் தினத்தை கொண்­டா­ட­மு­டி­யாது. காரணம் அங்­குள்­ள­வர்கள் வெ ளிப்­பி­ர­தே­சத்­திற்குச் சென்­று­வி­டு­வார்கள். ஆகவே தான் யாழில் இந்த நிகழ்வை முன்­னெ­டுப்­ப­தற்கு முடி­வெ­டுத்­தி­ருந்தோம். இது எமது கலா­சார ரீதி­யா­ன­வொரு வைப­வ­மாகும். வெசாக், பொசன், தைப்­பொங்கல், நத்தார் போன்­றன எமது சமய ரீதி­யான நிகழ்­வுகளாகும்.

பூகோ­ளத்தில் மாற்­றங்கள் நிகழ்­வ­தைப்­போன்று பூகோள அர­சி­ய­லிலும் மாற்­றங்கள் ஏற்­பட்­டு­கின்­றன. அவ்­வா­றான மாற்­ற­மொன்று நிகழ்ந்து முழு இலங்­கைக்கும் சூரி­யனின் ஒளிகிடை­கின்­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் இந்த நாட்­ட­வர்கள் அனை­வ­ருக்கும் பிர­கா­ச­மான நிலை­மைகள் ஏற்­பட்­டி­ருக்­கின்­றன. இதன்­கா­ர­ண­மா­கவே இன்று(நேற்று) இந்த விழாவைக் கொண்­டாட முடிந்­துள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­பா­ல­சி­றி­சே­ன­வுக்கு தவிர்க்­க­மு­டி­யாத கார­ணங்­களால் இந்­நி­கழ்வில் பங்­கேற்­ற­மு­டி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்ள நிலையில் அவ­ருக்கு பதி­லாக முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க பங்­கேற்­றி­ருக்­கின்றார். இந்த நாட்டில் சூரிய வெளிச்­ச­மின்றி வாழ்ந்­த­வர்­க­ளுக்கு தற்­போது பொறு­மை­யற்ற தன்­மை­யொன்று ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. அர­சியல் தீர்­வாக இருக்­கலாம், தொழில் வாய்ப்­பாக இருக்­கலாம், அபி­வி­ருத்­தி­யாக இருக்­கலாம் அனைத்­திலும் பொறு­மை­யற்ற நிலை­மை­களே காணப்­ப­டு­கின்­றன.

வடக்கு கிழக்கு மக்கள் கடந்த காலங்­களில் அதி­க­மாக பாதி­கப்­பட்­ட­வர்கள் என்­பதை அடிப்­ப­டை­யாக கொண்டு இவ்­வா­றான பொறு­மை­யற்ற தன்மை பல­ருக்கு காணப்­ப­டு­கின்­றது. வட­மா­காண முத­ல­மைச்சர் இவ்­வி­டயம் தொடர்­பாக சில விட­யங்­களை பேசி­யி­ருந்தார். அதன் அடிப்­ப­டையில் அவ்­வி­ட­யங்கள் தொடர்­பாக நான் சில கருத்­துக்­களை முன்­வைக்­க­லா­மென நினைக்­கின்றேன்.

வடக்கு கிழக்கில் 4600ஏக்கர் காணிகள் இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்டில் காணப்­ப­டு­கின்­றன. அதனை விடவும் சொற்ப அள­வி­லான நிலங்­களே மக்கள் பாவ­னை­யின்றி காணப்­ப­டு­கின்­றன. பொது­மக்­க­ளுக்கு தேவை­யான காணிகள், அபி­வி­ருத்­திக்கு தேவை­யான காணிகள், இரா­ணு­வத்­திற்க தேவை­யான காணிகள் ஆகிய தர­வு­களை கேச­ரித்­துக்­கொண்டு நாம் அனை­வரும் கலந்­து­ரை­யாடி கொள்­கை­ரீ­தி­யான தீர்­மா­ன­மொன்றை எடுக்­க­வேண்­டு­மெனக் கூறி­யி­ருந்தேன்.

இரண்டு மாதங்­க­ளுக்கு முன்­ன­தாக முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, வட­கி­ழக்கு முதல்­வர்கள், உறுப்­பி­னர்கள் ஆகியோர் கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தி­யுள்ளனர். இந்­தப்­பி­ரச்­சி­னையை நீண்­ட­கா­லத்­திற்கு காலங்­க­டத்திக் கொண்டு செல்ல முடி­யாது. 2020ஆம் ஆண்டில் இந்த நாட்டில் பாரிய பொரு­ளா­தார வளர்ச்சி ஏற்­ப­டு­கின்­ற­போது, அதி­க­ளவு வரு­மானம் பெறப்­ப­டு­கின்­ற­போது வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு முழு­மை­யான பயனை வழங்­க­வேண்டும்.

தற்­போதும் சிங்­கள மொழி­யி­லேயே கடி­தங்கள் அனுப்­பப்­ப­டு­வ­தாக வட­மா­காண முத­லை­மைச்சர் கூறி­யி­ருந்தார். அது தவ­றா­னது. தமிழ் மொழியில் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும் என்­ப­தற்­கான ஏற்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. தமிழ் மொழி­மூ­ல­மாக கட­மை­யாற்­று­ப­வர்கள் தொடர்பில் குறை­பா­டுகள் இங்கு காணப்­ப­டு­கின்­றன. அவற்றை நிவர்த்தி செய்­ய­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் விரைந்து எடுக்­கப்­ப­ட­வுள்­ளன. கொழும்பு திரும்­பி­ய­துடன் அது­தொ­டர்­பி­லான தாம­தங்­க­ளுக்­கான கார­ணங்­களை கண்­ட­றிந்து செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­க­வுள்ளேன். குறிப்­பாக இவ்­வா­றான குறை­பாட்டை நிவர்த்தி செய்யும் முக­மாக முதற்­கட்­ட­மாக பயிற்­றப்­பட்ட 500பேரை நிய­மிப்­ப­ட­வுள்­ளனர். அதன் பின்­னரும் தேவைகள் காணப்­ப­டு­மாயின் மேல­தி­க­மாக நிய­மிப்­ப­தற்கு தயா­ரா­வுள்ளோம்.

சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் கைதிகள் தொடர்­பாக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு உறுப்­பினர் சுமந்­திரன், அமைச்­சர்­க­ளான டி.எம்.சுவா­மி­நாதன், சாகல ரட்­நா­யக்க, விஜ­ய­தாஸ ராஜ­பக்ஸ மற்றும் அதி­கா­ரிகள் உள்­ளிட்­டோ­ருடன் கலந்­த­ரை­யா­டி­யுள்ளேன். அதில் இணக்­கப்­பா­டுகள் எட்­டப்­பட்­டுள்­ளன. அது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அறி­வித்­ததன் பின்னர் உத்­தி­யோக பூர்­வ­மான அறி­விப்பை வெ ளியிடுவோம்.

பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் தற்­போது காலா­வ­தி­யா­கி­விட்­டது. கால­ாவ­தி­யான பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை விரைவில் நீக்­க­வுள்ளோம். இங்கு பயங்­க­ர­வா­த­மில்லை. சர்­வ­தேச பயங்­க­ர­வா­தத்தை தடுப்­ப­தற்­காக ஐக்­கி­ய­நா­டு­களின் சட்­டங்­க­ளுக்கு உட்­பட்­ட­தான புதிய சட்­டங்­களை உள்­வாங்­கு­தற்கு எதிர்­பார்த்­துள்ளோம். இந்த ஆண்டின் நடுப்­ப­கு­தியில் அவ்­வே­லைத்­திட்டம் வெற்­றி­ய­ளிக்கும் என்ற நம்­பிக்­கை­யுள்­ளது.

காண­மல்­போனோர் தொடர்­பாக நாம் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். எமது பட்­டி­யலில் காணப்­ப­ட­தா­வர்­க­ளுக்கு என்ன நடந்­த­தென்று எனக்கு தெரி­யா­துள்­ளது. மிகவும் கவ­லை­யுடன் ஒரு விட­யத்தைக் கூறு­கின்றேன். அவ்­வா­றா­ன­வர்­களில் பெரு­ம­ள­வானோர் உயி­ருடன் இருப்­ப­தற்­கான வாய்ப்­புக்கள் இல்­லை­யென்றே கரு­தப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. இவ்­வா­றான பிரச்­சினை தெற்­கிலும் காணப்­பட்­டது. முன்னாள் ஜனாதிபதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்­கவின் ஆலோ­ச­னையின் கீழ் அவ்­வா­றா­ன­வர்­க­ளுக்கு இழப்­பீ­டுகள், சுகா­தாரம் உள்­ளிட்ட வச­தி­களை ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வுள்ளோம்.

அது மட்­டு­மன்றி பெண்­களைத் தலை­மைத்­து­வ­மாக கொண்ட குடும்­பங்­க­ளுக்கு உத­வி­களை வழங்­கு­வ­தற்­கான மத்­திய நிலை­யம் கிளி­நொச்­சியில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. இப்­பி­ர­தே­சத்தின் மாண­வர்­களின் கல்வி தொடர்­பாக கவ­ன­மெ­டுக்­கப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. இது தொடர்­பாக வடக்கு மாகா­ணத்­துடன் கலந்­து­ரை­யாடி நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு கல்வி அமைச்சர், இரா­ஜங்க அமைச்சர் ஆகி­யோ­ருக்கு பணிப்­புரை விடுத்­துள்ளேன்.

யாழ்ப்­பா­ணத்தில் இலங்கைச் சட்­டங்­க­ளுக்கு உட்­பட இரா­ணு­வத்­தி­னரே இருக்­கின்­றார்கள். 1990ஆம் ஆண்டு இந்­திய சமா­தா­னப்­ப­டை­யினர் வெளியே­றி­விட்­டார்கள். ஆயுதம் தாங்­கிய தமி­ழீழ விடு­தலை புலிகள் முடக்­கப்­பட்­டார்கள். 2002ஆம் ஆண்டு கைச்­சாத்­தான சமா­தான ஒப்­பந்­தத்தின் பிர­காரம் இலங்­கையின் நிலம், கடல், வான் பகு­தி­களை பாது­காப்­ப­தற்­கான உரி­மையும் கட­மையும் இரா­ணு­வத்­தி­ன­ருக்கு இருக்­கின்­றது என்­பது ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. விடு­த­லைப்­பு­லிகள் கூட அதனை ஏற்­றுக்­கொண்­டி­ருந்­தார்கள்.

விசே­ட­மாக வடக்கில் காணப்­படும் இரா­ணுவ பிர­சன்னம் தொடர்­பாக இரா­ணு­வத்­த­ள­ப­தி­யுடன் நான் பேச்­ச­வார்த்தை நடத்­தி­யுள்ளேன். வட­மா­கா­ணத்தின் பாது­காப்பு உள்­ளிட்ட விட­யங்கள் மேம்­பா­டையும் பட்­சத்தில் படிப்­ப­டி­யாக இங்­குள்ள இரா­ணு­வத்­தி­னரை வேறு இடங்­க­ளுக்கு அனுப்­ப­மு­டி­யு­மெனக் கூறி­யுள்ளார். இரா­ணு­வத்தில் பலர் ஓய்வு பெற­வுள்­ளனர். அவர்­கள் ஓய்வு பெற்ற பின்னர் மீண்டும் சாதா­ரண வாழ்­கையை வாழ்­வ­தற்­கான பயிற்சி வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

இங்கு ஒரு இர­க­சி­யத்தை உங்­க­ளுக்கு கூறு­கின்­றனர். நாம் மூன்று படைப்­பி­ரி­வி­னர்­க­ளுக்கு யுத்த பயிற்­சி­களை வழங்கி வரு­கின்றோம். ஆபி­ரிக்­காவின் மாலி போன்ற நாடு­க­ளுக்கு யுத்­த­திற்­கான அனுப்­ப­வ­தற்கும், ஐக்­கிய நாடுகள் வேண்­டுகோள் விடுக்கும் பட்­சத்தில் வேறு நாடு­களில் செயற்­ப­டு­வ­தற்­கா­க­வுமே நாம் அப்­ப­யிற்­சி­களை வழங்­கு­கின்றோம்.

மீன­வர்­களின் பிரச்­சி­னைகள் பூர­ண­மாக தீர்க்­கப்­படும் வரையில் கடற்­ப­டையில் குறைப்­புக்­களை மேற்­கொள்ள முடி­யாது. சட்­டத்­தையும் ஒழுங்­கையும் பாது­காக்கும், நிலை­நாட்டும் பொறுப்பு பொலி­ஸா­ரி­டத்தில் வழங்­கப்­பட்­டுள்­ளது. பொலிஸ் பிரிவில் மேலும் 500 தமிழ் மொழி பேசு­ப­வர்கள் இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். இலங்கை முப்­ப­டை­யி­னரும், பொலிஸ் பிரிவும் முழு­மை­யாக இலங்­கை­யர்­களைக் கொண்­ட­தாக மாற்­றி­ய­மைக்­கப்­ப­ட­வேண்டும். தற்­போது காணப்­படும் குறை­பா­டு­களை நிவர்த்தி செய்­ய­வேண்­டு­மென்­பதை ஏற்­றுக்­கொள்­கின்றேன்.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 30 ஆவது கூட்­டத்­தொ­டரில் ஏக­ம­ன­தாக தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சி­களை எடுத்து வரு­கின்றோம். குற்­ற­மி­ழைத்­த­வர்கள் இரா­ணு­வத்­தி­ன­ராக இருக்­கலாம் புலி­க­ளாக இருக்­கலாம் அவர்கள் இனங்­கா­ணப்­ப­ட­வேண்டும். அதற்­கான செயற்­திட்­டத்தை முன்­னெ­டுப்­ப­தற்­கான பொறி­மு­றையை அமைப்­ப­தற்­காக ஜப்பான், தென்­னா­பி­ரிக்கா போன்ற நாடு­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­திக்­கொண்­டி­ருக்­கின்றோம். சர்­வ­மத தலை­வர்­களை உள்­ள­டக்­கிய கருணை சபை­யொன்­றையும் அமைப்­ப­தற்கு திட்­ட­மிட்­டுள்ளோம். அதே­நேரம் வழக்கு தாக்கல் செய்­வது தொடர்­பான பொறி­மு­றை­யொன்­றையும் உரு­வாக்­கு­வது தொடர்­பாக கவனம் செலுத்தி வரு­கின்றோம்.

அர­சி­ய­ல­மைப்பை மறு­சீ­ர­மைப்பு செய்­வற்­காக அமைச்­ச­ர­வையில் தீர்­மனம் மேற்­கொண்டோம். அதற்­க­மைய பாரா­ளு­மன்­றத்தை அர­சியல் அமைப்பு பேர­வை­யாக மாற்­று­வ­தற்­கான பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை வெளிப்படையாக செய்யவுள்ளோம். அந்த விடயங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபையுடன் கூட கலந்துரையாடமுடியும். மக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.

அரசியலமைப்பு தொடர்பான வரைபு தற்போது இல்லை. மக்களின் கருத்துக்களின் அடிப்படையிலிருந்தே அரசியல் அமைப்பு வரைபு தொடர்பான கட்டமைப்பு மக்களின் கருத்துக்கள் மூலமாகவே உருவாகவேண்டும். 18ஆவது திருத்தத்தை பேராசிரியர் ஜி.எல்.பிரீஸ் மேற்கொண்டமை போன்று சர்வாதிகாரத்தனமாக மேற்கொள்வதற்கு இடமளிக்கப்படமாட்டாது.

தற்போது தோல்விடையந்த பின்னரே அவர்களுக்கு வெளிப்படைத்தன்மை புரிகின்றது. அது தொடர்பாக அழுகுரல் எழுப்புகின்றனர். பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் 225பேரும் ஒன்றிணைந்து வெளிப்படைத்தன்மையுடன் அரசியல் அமைப்பு வரைபை உருவாக்கவேண்டும். அதிகாரங்களை பகிர்வதற்கும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும் நாம் தயாராகவிருக்கின்றோம்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிற்கு சந்திரிகாவை கண்முன்னால் காணவே பிடிக்காது எனக் கூறினார். ஆனால் 13ஆவது திருத்தச்சட்டத்தின் போது நாம் ஒன்றுபட்டிருந்தோம். இக்காலத்தின்போது சந்திரிகாவின் கணவன் மரணமடைந்தார். எமது தரப்பினர் 5ஆயிரம் பேர் உயிரிழந்தனர். ஜே.ஆர். ஜெயவர்த்தன உருவாக்கிய அடுத்த தலைமுறை தலைவர்களின் மேலதிக சக்கரமாக காணப்பட்ட நான் மட்டுமே எஞ்சியுள்ளேன். ஆகவே நாம் அனைவரும் ஒன்றுபட்டு அனைத்துப்பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து அடுத்த தைப்பொங்கல் நிகழ்வில் சிறந்த சூழல் உருவாக்கப்படவேண்டுமென எதிர்பார்க்கின்றேன் என்றார்.