வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தின் அருளகம் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் புலம்பெயர் வாழ் தமிழ் சமூக சேவையாளர்களின் நிதியுதவியுடன் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (14.01) இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் கலந்துகொண்டு கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார் .வன்னிபாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மற்றும் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் அருளகம் சிறுவர் இல்ல சிறுவர் சிறுமியர் ஆகியோர் கலந்து கொண்டனர் .
வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் இருந்த சிவிலிய சேனா சிறுவர் இல்லம் மூடப்பட்டு அங்கிருந்த சிறுவர்கள் அருளகம் சிறுவர் இல்லத்துடன் இணைக்கபட்டத்தை தொடர்ந்து சிறுவர் சிறுமியர் தங்குவதற்கு போதிய இட வசதிகள் அற்ற நிலையில் தமிழர் தைதிருநாள் நிகழ்வில் மேற்படி சிறுவர் இல்லத்துக்கான புதிய கட்டிடத்து க்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.






