புதையல் அகழ்வில் ஈடுபட்ட பெண் உட்பட 6 பேர் கைது!!

469

1 (39)

பகமூன பிரதேசத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவர் உட்பட 6 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பகமமூன பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது பதையல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் கந்தரை, தம்புள்ளை மற்றும் அத்தனகடவள போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.