மனைவியை பழிவாங்க 7 வயது மகளை கொன்ற தந்தை: 16 வருடங்கள் சிறை தண்டனை!!

438

bloody_knife

சுவிட்சர்லாந்து நாட்டில் கள்ள தொடர்பு வைத்திருந்த மனைவியை பழிவாங்க 7 வயது மகளை கொன்ற தந்தைக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என தாயார் கோரிக்கை வைத்துள்ளார்.சுவிஸின் வாலைஸ் மாகாணத்தில் உள்ள Founex என்ற நகரில் பெயர் வெளியிடப்படாத தந்தை ஒருவர் தனது மனைவி மற்றும் 7 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார்.

முன்னாள் வங்கி ஊழியரான இவருக்கும் இவரது மனைவிக்கு அடிக்கடி கருத்து வேறுபாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், 2012ம் ஆண்டு யூன் மாதத்தில் தற்கொலை முடிவுக்கு தந்தை வந்ததாக கூறப்படுகிறது.இதன் விளைவாக அளவுக்கு அதிகமாக போதை மாத்திரிகைகளை எடுத்துக்கொண்ட அவர், தனது மகளுக்கும் கொடுத்துள்ளார்.

இந்த சம்பவத்தில் மகள் உயிரிழக்க தந்தை பிழைத்துக்கொண்டார். ஆனால், வழக்கின் திசை தற்போது எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த வியாழக்கிழமை நீதிமன்றத்திற்கு வந்தபோது, ‘போதை மருந்தை விளையாட்டாக தன்னுடைய மகளின் வாயில் திணித்ததால் தான் இந்த மரணம் ஏற்பட்டதாக’ அவர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆனால், தாயாரின் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், தந்தை சொல்வதை ஏற்க முடியாது. போதை மருந்து காரணமாக சிறுமி இறக்கவில்லை. போதை மருந்தை உட்கொண்டு சிறுமியின் கழுத்தை பலமாக நெரித்துள்ளார். இதற்கான ஆதாரங்களும் படுக்கை விரிப்பில் ரத்த அடையாளங்களும் இருந்துள்ளது.மனைவிக்கு ஏற்கனவே ஒரு நபருடன் தொடர்பு இருப்பதை அவரே கணவரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

மனைவியை பழிவாங்கும் நோக்கில் தான் தன்னுடைய சொந்த மகளை கொன்றுள்ளார்.எனினும், குற்றம் சாட்டப்பட்டுள்ள தந்தைக்கு 16 வருடங்கள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என நீதிபதியிடம் வாதாடினார்.நீதிமன்றத்தில் ஆஜரான சிறுமியின் தாயார், ‘என்னுடைய கணவர் ஒரு மிக மோசமான முரடர். என்னை அடிக்கடி துன்புறுத்துவார். அவரிடம் இருந்து தப்பிக்க விவாகரத்து பதிவு செய்துள்ளதால், என்னை பழிவாங்க மகளை கொன்றுவிட்டார். எனவே, அவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என நீதிபதியிடம் முறையிட்டுள்ளார்.இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை இன்னும் சில தினங்களில் தொடங்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.