மூன்று சீனக் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்தன!!

467

1996717747Untitled-1

சீனாவின் 21வது கடற்படையின் விஷேட பாதுகாப்பு கப்பல்கள் ஐந்து நாள் சுற்றுப் பயணமாக இலங்கையை வந்தடைந்துள்ளன. சீனக் கடற்படையின் வழிகாட்டல் ஏவுகணை போர்க் கப்பல்களான, லியூசோ, சன்யா ஆகியனவும், விரிவான விநியோக கப்பலான குயிங்ஹாய்ஹுவுமே இவ்வாறு கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

இந்தக் கப்பல்களுக்கு கொழும்பிலுள்ள சீனத் தூதுவர் யி ஜியான்லியாங் உள்ளிட்ட குழுவினர் அமோக வரவேற்பளித்துள்ளனர். இதேவேளை பாகிஸ்தான் கராச்சி நகரை அடுத்து, இந்த மூன்று யுத்தக் கப்பல்களும் ஆசியாவில் விஜயம் செய்யும் இரண்டாவது இடமாக கொழும்பு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.