இன்று முதல் அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் கருத்துக்களை பெறும் நடவடிக்கை!!

454

proponer

புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறியும் நடவடிக்கை இன்று கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பமாகவுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 22ம் திகதி வரை கொழும்பு – கொம்பனித்தெரு பகுதியிலுள்ள விசும்பாயவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை ஆராயும் குழு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி காலை 09.30 முதல் மாலை 04.30 வரை மக்கள் தமது கருத்துக்களையும் யோசனைகளையும் வழங்க முடியும். இது குறித்த மேலதிகத் தகவல்களை 011 2 43 76 76 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.

அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் பெப்ரவரி மாதமளவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை ஆராயும் குழு சுட்டிக்காட்டியுள்ளது.