
ஹெட்டன் – சிங்கமலை காட்டு பகுதியில் ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக 6 ஏக்கர், அளவிலான நிலப்பரப்பு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று இவ்வாறு ஏற்பட்ட தீப்பரவலை கட்டுபாட்டுக்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
தீப்பரவலுக்கான காரணம் இது வரை கண்டறியப்படவில்லை என காவல் துறை ஊடக பிரிவு மேலும் தெரிவித்தது.





