தந்தையை கொலை செய்து கிணற்றில் வீசிய வாலிபர்: சொத்து தகராறில் நிகழ்ந்த கொடூரம்!!

480

bloody_knife

சொத்து தகராறு காரணமாக வாலிபர் ஒருவர் தனது தந்தையை கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே இருக்கும் பூமாண்டஅள்ளி ஊராட்சி போலம்பட்டியை சேர்ந்த விவசாயி பெருமாள் (50), அவரது மனைவி பாஞ்சாலை (42) என்ற தம்பதிக்கு அருள்மணி (24) இளையராஜா (16) என்ற மகன்கள் உள்ளனர்.

பெருமாள் குடிப்பழக்கம் உள்ளவர் என்பதால், அவரின் தந்தை சின்னசாமி தன்னுடைய 4 ஏக்கர் நிலத்தை மருமகள் பாஞ்சாலை பெயரில் கிரையம் செய்துள்ளார். இதையடுத்து இந்த சொத்து விஷயத்தால் பெருமாள் தனது மனைவியிடம் தகராறு செய்து வந்த நிலையில் அவர் வேறு ஒரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பாஞ்சாலை தன் மகன்களுடன் அல்லியூரில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் பாஞ்சாலை போலம்பட்டியில் தனது பெயரில் உள்ள நிலத்தில் வீடு கட்டத் தொடங்கியுள்ளார்.இதை பார்த்த பெருமாள் தனது 2வது மனைவியின் மகன்களான உமாசங்கர், அஜீத்கண்ணன் ஆகியோருக்கும் சொத்தில் பங்கு அளிக்குமாறு கூறி தனது தந்தை அருள்மணியிடம் தகராறு செய்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 14ம் திகதி பெருமாள் குடிபோதையில் அருள்மணியிடம் தகராறு செய்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த அருள்மணி தந்தையை அடித்துக் கொன்று அவரின் உடலை அருகில் இருந்த கிணற்றில் வீசியுள்ளார்.பின்னர் பூமாண்டஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் முருகன் முன்பு அருள்மணி சரணடைந்தார்.தீயணைப்பு படை வீரர்கள் பெருமாளின் உடலை கிணற்றில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.