
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் இரண்டு நிலைகளில் கணிதம் மற்றும் ஆங்கில பாட வினாத்தாள்கள் அறிமுகம்செய்யப்பட உள்ளது.எதிர்வரும் ஆண்டு முதல் இரண்டு நிலைகளைக் கொண்ட கணிதப்பாட வினாத்தாள்களும் இரண்டு நிலைகளைக் கொண்ட ஆங்கிலப் பாட வினாத்தாள்களும் அறிமுகம் செய்யப்படும் என தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் குணபால நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆண்டு முதல் அனைத்து மாணவர்களும் இடையறாது 13 ஆண்டுகள் கல்வி கற்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.இந்தக் கொள்கைக்கு அமையவே இரண்டு நிலைகளில் கணித மற்றும் ஆங்கில பாட வினாத்தாள்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.இதேவேளை,எதிர்வரும் ஆண்டு முதல் சில கடினமான பாடங்கள் தொடர்பில் நெகிழ்வுத்தன்மை பின்பற்றப்பட உள்ளது.மாணவர்கள் எத்தனை பாடம் கற்க வேண்டும் என்பது குறித்து தீர்மானிக்கப்படும்.
இந்தப் புதிய முறைமையின் ஊடாக திறமைகூடிய மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியைத் தொடரவும் ஏனையவர்கள் தொழில்சார் கல்வியைத் தொடரவும் வழியமைக்கப்படும் எனவும் பணிப்பாளர் நாயகம் குணபால நாணயக்கார தெரிவித்துள்ளார்.





