
சுவிட்சர்லாந்து – டெவோஸில் இடம் பெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று அதிகாலை 3.00 மணியளவில் சுவிட்சர்லாந்து நோக்கி பயணமானார்.அவருடன் 12 உறுப்பினர் கொண்ட குழுவொன்றும் பயணமானது.
இவர்களுள் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம மற்றும் ரவி கருணாநாயக்க உள்ளடங்குகின்றனர்.நாளை முதல் 23 ஆம் திகதி வரை இடம் பெறவுள்ள, பொருளாதார மாநாட்டில் புதிய போக்குகள் தொடர்பாக ஆழமாக ஆராயப்படவுள்ளது.இந்த மாநாட்டில் 40 நாடுகளுக்கும் அதிகமானவற்றின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
எதிர்காலத்தில் உலக நன்மைக்காக, உலக தலைவர்களின் திட்டங்களை, இலக்காக கொண்டு செல்வதுடன், உலகளாவிய மற்றும் பிராந்திய பொருளாதார கூட்டு நிகழ்ச்சி நிரலை செயற்படுத்த முயற்சிப்பதே இந்த மாநாட்டின் இலக்காகும்.இலங்கைக்கு முதல் முதலாக உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்கான அழைப்பு இம்முறை கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.





