உலகில் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு இ-சிகரெட் என அழைக்கப்படும் சிகரெட் அறிமுகமாகியது. இந்நிலையில் முதன்முதலாக ஸ்மார்ட் போனுடன் இந்த இ-சிகரெட் விற்பனைக்கு வந்துள்ளது.ஜூபிட்டர் ஐ.ஓ. – 3 என அழைக்கப்படும் இப்போனானது அன்றோயிட் இயங்குதளத்தில் இயங்கிவருகிறது.
இதன் விசேட அம்சமாக இரண்டு பற்றிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒன்று போனுக்காகவும் மற்றையது இ.சிகரெட்டுக்கும். அத்துடன் இ – சிகரெட் இனை சார்ஜ் ஏற்றுவதற்காக ஜக் ஒன்றும் இலவசமாக வழங்கப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.மேலும், இப்போனுடன் பலவித வாசனைத்திரவியங்கள் அடங்கிய காட்றிஜ் உம் இ-சிகரெட் குச்சி ஒன்றும் வழங்கப்படுகின்றது. விரும்பிய நேரத்தில் புகைப்பிடிக்கலாம். அத்தோடு இச்சிகரெட்டினை 800 தடவைகள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.
புகைப்பிடிக்கும் மோகத்தைக் குறைப்பதற்காக இதனுடன் வெப் அப்பிளிக்கேஷன் ஒன்றும் தரப்படுகின்றது. அளவுக்கதிகமாக புகைப்பிடிக்கும்போது இது எச்சரிக்கை செய்யும். இந்த ஸ்மார்ட் போன்கள் 3ஜி இன்டர்நெற் வசதியுடன் 20,000 ரூபாவிற்கும் 4ஜி இன்டர்நெற் வசதியுடன் 33,000 ரூபாவிற்கும் விற்கப்படுகின்றது.அத்துடன் வழக்கமான சிகரெட்டுகளுடன் ஒப்பிடும்போது இதன் பாவனையால் ஏதாவது கதிர்வீச்சு நடைபெறுகின்றதா என்பதைக் கண்டறிவதற்கான ஆராய்ச்சிகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.