
இலங்கை தொடர்பாக இந்த வருட உலக பொருளாதார மாநாட்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், அதிக அவதானம் செலுத்துவதாக நிதி அமைச்சர் ரவிகருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொருளாதார மாநாட்டில் இலங்கைக்கு சிறந்த பயன் கிடைக்குமென எதிர்பார்ப்பதாக அவர், எமது செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.இந்த வருட பொருளாதார மாநாடு சுவிஸ்லாந்து – டெவோஸ் நகரில் இடம் பெறுகிறது.இதில் இலங்கை சார்பில் பிரதமருடன் குழுவோன்றும் பங்குபற்றுகின்றது.





