கொழும்பு துறைமுக நகர செயற்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் – பிரதமர்!!

443

601957111ranil

சீனாவின் முதலீட்டில் இலங்கையில் மேற்கொண்டு வந்த கொழும்பு துறைமுக நகர செயற்திட்டம், தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.சுவிர்சலாந்தில் இடம்பெறும் உலக பொருளாதார மாநாட்டின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சீனா முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்யுமாறும் பிரதமர் இதன்போது அழைப்பு விடுத்துள்ளார்.இதற்கிடையில், இலங்கையில் சிங்கள, தமிழ் அரசியல் கைதிகள் தற்போது இல்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அதேநேரம் யுத்தப் பாதிப்புக்கு உள்ளான மக்கள் மத்தியிலும், பிரதேசங்களிலும் சமாதான முன்னெடுப்புகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.