மனநலம் பாதிக்கப்பட்டவரின் தாக்குதலில் நபர் ஒருவர் பலி!!

456

Dead

மீட்டியாகொட – பெரதுடுவ பிரதேசத்தில் நபர் ஒருவர், பொல்லினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரே இவ்வாறு தாக்கியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் பெரதுடுவ பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.எனினும் மனநலம் பாதிக்கப்பட்டவரை அவரது உறவினர்கள், அங்கொடை மனநல மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.நேற்று மாலை இருவர், இவ்வாறு தாக்ககுதலுக்கு உள்ளாகியுள்ளனர்.பின்னர் இருவரையும் கடும் காயங்களுடன் கராபிட்டிய மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், நீல் தசாநாயக்க என்பவர் உயிரிழந்துள்ளார்.