வவுனியா கற்பகபுரம் பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய சாந்தநாயகி நற்பணி மன்றம்!!

520

வவுனியா கற்பகபுரம் அ.த.க.பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டியை முன்னிட்டு ”விளையாடிலும் கல்வி” எனும் தொனிபொருளில் பரிசளிக்க அதிபர் திரு செ.வேதநாதன் அவர்கள் தமிழ் விருட்சத்திடம் கற்றல் உபகரணங்கள் வழங்கும் படி கேட்டு கொண்டதுக்கு இணங்க சாந்தநாயகி நற்பணி மன்றத்தால் ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

சாந்தநாயகி நற்பணி மன்றம் தமிழ் விருட்சத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவை ஒட்டி இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுக்கு அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது .

சாந்தநாயகி நற்பணி மன்றத்தின் இந்த உதவியை தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ) செயலாளர் மாணிக்கம் ஜெகன் ஆகியோர் பாடசாலையின் ஆசிரியர் திரு ஜே.ஜீவதாசன் அவர்களிடம் கையளித்தனர் .பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி 22.01.2016 நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

10961700_1431404017150740_2062557324_n DSCN0507 DSCN0509 DSCN0511 DSCN0513 DSCN0517 DSCN0518 DSCN0519 DSCN0521