
சவுதி அரச குடும்பத்தில் பிரத்தியேக சாரதியாகப் பணிபுரிந்த இலங்கையர் ஒருவருக்கு பிரியாவிடை நிகழ்வொன்று அந்நாட்டின் அரச மாளிகையில் இடம்பெற்றுள்ளது.கடந்த 33 வருடங்கள் சாரதியாக இவர் சேவையாற்றியுள்ளார்.
சமீ என செல்லமாக அரச குடும்பத்தினரால் அழைக்கப்பட்ட இவர், ஓய்வு பெற்று இலங்கை திரும்பும் போது கௌரவிக்கு முகமாக விருந்துபசார நிகழ்வை அரச குடும்பம் ஏற்பாடு செய்துள்ளது.





