
இந்தியக் கடற்படையின் மிகப்பெரிய விமானந்தாங்கி போர்க்கப்பலான ”ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா’ நல்லெண்ணப் பயணமாக இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.இந்தியக் கடற்படையின் ‘ஐஎன்எஸ் மைசூர்’ என்ற நாசகாரி போர்க்கப்பலின் பாதுகாப்புடன், ‘ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா’ இன்று காலை கொழும்புத் துறைமுகத்துக்கு வந்த போது, இலங்கை கடற்படையினரால் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாரம்பரிய முறைப்படி இந்திய விமானந்தாங்கி கப்பலுக்கு இலங்கை கடற்படையின் வாத்திய அணியினர் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.இந்த விமானந்தாங்கி போர்க்கப்பல் வரும் 23ம் நாள் வரை கொழும்பில் தரித்து நிற்கவுள்ளது.





