
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கதினருடன் தொடர்புடைய 4 இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.கும்பமேளா, மற்றும் ஹரித்வார் செல்லும் ரயில், டெல்லி போன்ற இடங்களில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய 4 இளைஞர்கள்கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரகாண்டில் 4 இளைஞர்கள் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினருடன் தொடர்புடைய இணையதளங்களை அடிக்கடி பார்வையிட்டதையடுத்து அவர்களை உளவுப்பிரிவு பொலிசார் தீவிரமாக கண்காணித்துள்ளனர்.அவர்கள் சிரியாவுக்கு அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வந்தது தெரியவந்துள்ளது.
மேலும் வெடிகுண்டுகளை தயார் செய்வது எப்படி என இணையதளங்களில் அவர்கள் தேடியுள்ளனர்.இதையடுத்து பொலிசார் அந்த 4 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களில் அக்லாக் உர் ரகுமான் என்ற இளைஞரிடம் பதன்கோட் தாக்குதல் குறித்து பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.





