பள்ளிக்கு சொந்தமான பேருந்தில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்!!

435

1 (11)

பள்ளிக்கு சொந்தமான பேருந்தில் 4 வயது சிறுமியை நடத்துனர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜெய்ன் பகுதியில் உள்ள பள்ளிக்கு சொந்தமான பேருந்தில் நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவ, மாணவிகளை வீட்டின் அருகே இறக்கிவிட்டுள்ளனர்.

பேருந்தில் கடைசியாக 4 வயது மாணவி மட்டும் இருந்துள்ளார். அந்த மாணவியை அந்த பேருந்தில் இருந்த நடத்துனர் மகேஷ் பக்வான் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.பின்னர் இதுபற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என சிறுமியை மிரட்டியுள்ளார்.

சிறுமி வீட்டிற்கு சென்றதும் பெற்றோரிடம் அழுது கொண்டே தனக்கு நடந்த சம்பவத்தை கூறினாள்.இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக பொலிசில் புகார் கொடுத்துள்ளனர்.இதையடுத்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து உடனடியாக கண்டக்டரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.