
சீனாவில் பள்ளிக்குழந்தைகளை ஊசியால் குத்திய 5 ஆசிரியர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.சீனாவின் Siping நகரில் இயங்கி வரும் மழலையர் பள்ளியில் பணியாற்றும் 5 ஆசிரியர்கள், ஒழுங்கு நடிவடிக்கை என்ற பெயரில், அங்குள்ள 20 குழந்தைகளை ஊசியால் குத்தியுள்ளனர்.
இதில் ஒரு குழந்தையின் உடல் முழுவதும் 50 ஊசித்துளை காயங்கள் இருந்தது தடவியல் சோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து குழந்தைகளின் பெற்றோர் பொலிசில் புகார் தெரிவித்ததையடுத்து, ஆசிரியர்களை கைது செய்துள்ள பொலிசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இதில் ஒரு ஆசிரியர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.





