
30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 1000 ரூபாய் நோட்டுகளை தவறுதலாக ரிசர்வ் வங்கி அச்சடித்து வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்திய ரூபாய் நோட்டுகளின் முக்கியப் பாதுகாப்பு அம்சமாகக் கருதப்படும் வெள்ளி நூல் இல்லாமல், 5AG, 3AP வரிசையில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சடித்துள்ளது.
அவற்றில் 20 ஆயிரம் கோடி ரூபாய் ரிசர்வ் வங்கியிடமும், 10 ஆயிரம் கோடி ரூபாய் புழக்கத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.5AG, 3AP வரிசையில் உள்ள 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.மேலும், புழக்கத்தில் உள்ள 5AG, 3AP வரிசை நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அச்சகம் உட்பட பல தரப்பிலும் உயர்மட்ட விசாரணை நடைபெற உள்ளதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும், தவறுதலாக அச்சடிக்கப்பட்ட 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் தீயிட்டு எரிக்க ஆர்.பி.ஐ முடிவு செய்துள்ளது.





