பாலா என் துணியை கூட கிழித்தார்!!

867

Varalaxmi

தாரை தப்பட்டை படத்தை பற்றி யார் என்ன சொன்னாலும், வரலட்சுமி நடிப்பை பற்றி யாராலும் பேச முடியாமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு இப்படத்தில் தன் அர்ப்பணிப்பை கொடுத்துள்ளார் இவர். இந்நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் முன்னணி நாளிதழ் ஒன்றி பேட்டியளித்த இவரிடம், படப்பிடிப்பில் பாலா எப்படி என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் ‘நான் அவரிடம் இந்த கதாபாத்திரத்திற்காக ஏதும் பயிற்சி எடுக்க வேண்டுமா? என்று கேட்டேன், அவர் “அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், படப்பிடிப்பிற்கு வா, நான் சொல்வதை செய்” என்பார். படப்பிடிப்பில் இருந்த ஒரு வருடமும் ஸ்பாட்டில் நான் கண்ணாடியே பார்க்கல. ரெடியாகி பாலா சார் முன்னால போய் நிற்போம் அவர்தான் முடியைக் கலைச்சுவிடுவார், மேக் அப் சரி பண்ணுவார், தேவைப்பட்டா துணியை கூட கிழித்துவிடுவார்’ என கூறினார்.