
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் 5ம் வகுப்பு புலமை பரிசில் ஆகிய பரீட்சைகளில் தெளிவான மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.தேசிய கல்வி நிறுவகம் இதற்கான நடவடிக்கையை எடுத்து வருவதாக அதன் பணிப்பாளர் பேராசிரியர் குணபால நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் தெரிவுகளை அதிகரிக்கவும், சுமையை குறைக்கவும் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பரீட்சை நடத்தப்படும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், மாணவர்களுக்கான விசேட உளவியல் பரீட்சையொன்றையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், 5ம் வகுப்பு புலமை பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களினதும், அவர்களின் பெற்றோரினதும் சுமையை குறைக்கும் வகையில், குறித்த பரீட்சையின் கடினத்தன்மை குறைக்கப்படவுள்ளது. இதன்படி 3ம் மற்றும் நான்காம் வகுப்புகளின் இறுதியாண்டு பரீட்சைகளில் பெறும் புள்ளிகளையும், புலமைப் பரிசில் பரீட்சையுடன் இணைப்பதற்கான திட்டம் ஒன்றுக்கு ஆராயப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.





