
இலங்கை அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் பற்றி முன்னாள் அணித்தலைவர் ஜெயவர்த்தனே கருத்து தெரிவித்துள்ளார்.சமீபத்தில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இலங்கை அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து தொடரையும் மோசமாக இழந்தது.
இதனால் இலங்கை அணியில் சில மாற்றங்களை செய்யவும், மூன்று வகை கிரிக்கெட்டுக்கும் ஒருவரை தலைவராக நியமிக்கவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருகிறது.இது பற்றி இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் ஜெயவர்த்தனே கூறுகையில், ”நியூசிலாந்து அணி வலிமையான அணி. அந்த அணியில் துடுப்பாட்ட வரிசையும், தாக்குதல் பந்துவீச்சும் சிறப்பாக உள்ளது.
அதுவும் அந்த அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான விடயம் இல்லை. நேர்மையாக சொல்லப் போனால் நான் கூட இலங்கை அணியால் வெற்றி பெற முடியும் என்று நினைக்கவில்லை.சில ஆண்டுகளாக இலங்கை அணி பல வகைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. அனுபவமின்மையால் ஏற்பட்ட தோல்வி தான் இது. வீரர்களை குறை சொல்வது எளிது. எனவே பொறுமை காப்பது அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.





