வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!(படங்கள்)

893

 
வவுனியா புளியங்குளம் A9 வீதியில் கயஸ் வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதில் இருவர் காயமடைந்துள்ளனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

வவுனியாவில் இருந்து A9 வீதியின் ஊடாக பயணித்த முச்சக்கர வண்டியும் கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த கயஸ் ரக வாகனமும் புளியங்குளத்தில் எதிரெதிரே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கர வண்டின் சாரதியான கண்டியைச் சேர்ந்த விஜய கோன் (வயது 31), முச்சக்கர வண்டியில் பயனித்த டமிசி சத்துரங்க (வயது 15) என்ற சிறுவனும் காயமடைந்து வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

12604788_10207223127849628_8630007479728834948_o 12615180_10207223128329640_2425650173394807442_o 12615400_10207223127689624_4626367475099009095_o 12615405_10207223127969631_6999892643262083097_o 12622497_10207223128369641_2126700121850309581_o